திண்டுக்கல் : திண்டுக்கல் தருமத்துப்பட்டி அருகே கோம்பை அணை நிரம்பி வழிவதால் பொதுமக்கள் அங்கு படையெடுக்கின்றனர்.
ஆடலூர், பன்றிமலை பகுதிகளில் பெய்த தொடர்மழையால் கோம்பை நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 4 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி தற்போது மறுகால் பாய்கிறது.20 க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் நீராதாரமாக உள்ளது. நிரம்பி வழியும் நீர்த்தேக்கத்தை காண பலர் இங்கு படையெடுக்கின்றனர்.
அடிப்படை வசதிகளில்லை
இங்கு அடிப்படை வசதிகளே கிடையாது. நீர்த்தேக்கத்திற்கு செல்ல சாலை வசதிகள் இல்லை. மழை பெய்தால் மண்ரோடு சேறும், சகதியுமாக மாறும். நீர்த்தேக்கத்தைச் சுற்றி தடுப்புச் சுவர் இல்லை.நாளுக்கு நாள் இங்கு சுற்றுலா பயணிகள் வருவது அதிகரிக்கிறது. அருகில் பொழுது போக்கிடமோ, சிற்றுண்டி ஓட்டல்களே இல்லை. அரசு ஆய்வு செய்து பணிகளை மேற்கொண்டால் வருவாய் ஈட்டலாம்.
அப்பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி கூறியதாவது: நான்காண்டுக்கு பின் நிரம்பி வழிவதால், விவசாயம், குடிநீருக்கு பஞ்சம் நீங்கும். நாளுக்கு நாள் சுற்றுலாவாக வரும் பொதுமக்கள் வருவது அதிகரித்துள்ளது. பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தினால் விபத்துகளை தவிர்க்கலாம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE