எழுவர் மீது வழக்கு
வடமதுரை: குருந்தம்பட்டியில் விவசாயி சுப்ரமணி, மீனாட்சிசுந்தரம் ஆகியோரிடையே பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. சுப்பிரமணி வீட்டிற்கு உறவினருடன் வந்த மீனாட்சிசுந்தரம் தகராறு செய்ததால் கோஷ்டி மோதலானது. சுப்பிரமணி, மீனாட்சி சுந்தரம் இருவரும் காயமடைந்தனர். இரு தரப்பு புகாரில் அங்கமுத்து, கவுசல்யா, மீனாட்சிசுந்தரம், சுப்பிரமணி உள்பட 7 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ரேஷன் கடை திறப்பு
நிலக்கோட்டை: பேரூராட்சியில் என். புதுப்பட்டியில் புதிய ரேஷன் கடைக்கான கட்டட திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர்கள் தண்டபாணி, சேகர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் கலையரசி வரவேற்றார். தேன்மொழி எம்.எல்.ஏ.,புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அ.தி.மு.க., ஒன்றிய, நகர நிர்வாகிகள் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
விவசாயிக்கு அழைப்பு
குஜிலியம்பாறை: நடப்பு பருவத்தில் நிலக்கடலை, எள், மக்காச்சோளம், நெல், துவரை, உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகள் குஜிலியம்பாறை வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இயற்கை இடர்பாடுகளில் இருந்து பயிர்களை பாதுகாக்க, காப்பீடு செய்து பயன்பெறறலாம் என, வேளாண் உதவி இயக்குநர் கீதா கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE