எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

கேரள உள்ளாட்சித்தேர்தல் தோல்வி; காங்.,கில் துவங்கியது கோஷ்டி மோதல்

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
திருவனந்தபுரம் : கடந்த லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங். தோல்வி அடைந்தது கட்சியில் கோஷ்டி மோதல் எதிர்ப்பு கானத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. மாநிலத் தலைவரை மாற்ற பலர் குரல் எழுப்பியுள்ளனர்.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. அடுத்தாண்டு ஏப். - மே
Congress,kerala,காங்கிரஸ்,கேரளா

திருவனந்தபுரம் : கடந்த லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங். தோல்வி அடைந்தது கட்சியில் கோஷ்டி மோதல் எதிர்ப்பு கானத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. மாநிலத் தலைவரை மாற்ற பலர் குரல் எழுப்பியுள்ளனர்.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. அடுத்தாண்டு ஏப். - மே மாதங்களில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் மூன்று கட்டங்களாக நடந்தது. இந்தத் தேர்தலில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளில் 19ல் காங். வென்றது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாதது கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் 375 கிராமப் பஞ்சாயத்துகள் 44 வட்டார பஞ்சாயத்துகள் 45 நகராட்சிகள் மூன்று மாவட்ட பஞ்சாயத்துகளில் காங். தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி முன்னிலையில் உள்ளது.

பல மூத்த தலைவர்கள் வெளிப்படையாகவே தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். மாநிலத் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனை மாற்றும்படி அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளை மாற்றக் கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுபோல கோழிக்கோடு உட்பட பல இடங்களிலும் கட்சியின் தோல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதற்கிடையே காங்.கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பி.ஜே. குரியன் வடக்கரை எம்.பி.யான கே.முரளீதரன் காசர்கோடு எம்.பி.யான ராஜ்மோகன் உன்னிதன் ஆகியோர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

''கட்சியில் ஜனநாயகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. மக்கள் மட்டுமல்ல கட்சியினரின் நம்பிக்கையையே நாம் இழந்து வருகிறோம்'' என மற்றொரு மூத்த எம்.பி.யான கே. சுதாகாரன் கூறியுள்ளார்.இவ்வாறு காங். மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு கோஷம் எழுப்பியுள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.


latest tamil news


''மாநிலத்தில் அரசுக்கு எதிரான மனநிலை உள்ளது. ஆனால் அதை சரியாக பயன்படுத்த தவறிவிட்டோம்'' என முக்கிய கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பி.கே. குன்ஹாலிகுட்டி கூறியுள்ளார்.மற்றொரு கூட்டணி கட்சியான புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியும் இது போன்றை கருத்தை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே கட்சியின் மூத்த தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளதாவது: கடந்த 2015 உள்ளாட்சித் தேர்தலைவிட சற்று அதிக இடங்களில் தற்போது வென்றுள்ளோம். அரசுக்கு எதிரான மனநிலை இல்லை என்பது தெரிகிறது. தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம். மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவோம் என கூறிய பா.ஜ. படுதோல்வி அடைந்துவிட்டது. மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


பலத்தை இழக்கவில்லை


மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, தன் பலத்தை இழக்கவில்லை. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் தங்கள் பலத்தை அதிகரித்துள்ளன. நம்மால் அதை செய்ய முடியவில்லை; அதராஜ்மோகன் உன்னிதன், எம்.பி., - காங்.,

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
18-டிச-202009:07:22 IST Report Abuse
கொக்கி குமாரு சிரியாவில் எத்தனை கோஷ்டிகள் சண்டை போடுகிறது என்று ஈஸியாக கண்டுபிடித்துவிடலாம். ஆனால்,காங்கிரஸ் கட்சியில் எத்தனை கோஷ்டிகள் சண்டை போடுகிறது என்று கண்டுபிடிப்பது கஷ்டம்.
Rate this:
18-டிச-202018:44:43 IST Report Abuse
விடியலை நோக்கி :: வெற்றி நமதே அப்போ BJP மொத்தம் காலி யாயிற்றே அவர்கள் என்ன கோஷ்டி கானம் பாடவில்லை யா என்ன...
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
18-டிச-202007:59:06 IST Report Abuse
Allah Daniel (காங்கிரசுக்கு) சங்கூதுற சத்தம் கேட்குது...
Rate this:
Cancel
Sutha - Chennai,இந்தியா
18-டிச-202007:22:54 IST Report Abuse
Sutha எப்படியோ வகுப்புவாத காங்கிரஸ் ஒழிந்தால் சரிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X