பொது செய்தி

இந்தியா

கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Added : டிச 18, 2020
Share
Advertisement
புதுச்சேரி; புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.நிவர், புரெவி புயல் மழை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு புதுச்சேரி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.அதன்படி, புதுச்சேரியில் கடந்த 16ம் தேதி

புதுச்சேரி; புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.நிவர், புரெவி புயல் மழை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு புதுச்சேரி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.அதன்படி, புதுச்சேரியில் கடந்த 16ம் தேதி நள்ளிரவு துவங்கி, விடிய விடிய மழை பெய்தது. இரண்டாம் நாளாக நேற்றும் விட்டு விட்டு கனமழை கொட்டியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கனமழையால் இந்திரா சிலை சதுக்கம், புஸ்சி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.பொய்யாகுளம், பாவாணர் நகர், ரெயின்போ நகர், செல்லான் நகர், நடேசன் நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட பல இடங்களில் 500 வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. தேங்கிய தண்ணீரை பொதுப்பணித் துறை, உழவர்கரை நகராட்சியினர் ராட்சத மின் மோட்டார் மூலம் உடனுக்குடன் வெளியேற்றினர்.நேற்று முன்தினம் (16ம் தேதி) காலை 8.30 மணி முதல் நேற்கு காலை 8.30 மணி வரை புதுச்சேரியில் 121.2 மி.மீ., மழை பெய்தது. கிராமப் புறங்களிலும் பரவலாக கனமழை பெய்துள்ளது. பாகூரில் -113மி.மீ., திருக்கனுாரில்-56 மி.மீ., பத்துக்கண்ணு பகுதியில் 135 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.பள்ளிகளுக்கு விடுமுறைபுதுச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும்வகையில் வகுப்புகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. கல்லூரி இளங்கலை, முதுகலை படித்து வரும் மாணவர்களுக்கான இறுதியாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கியது.தொடர் கனமழையால், முதல்வர் நாராயணசாமி உத்தரவின்பேரில் புதுச்சேரியில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. காரைக்காலிலும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X