புதுச்சேரி; புதுச்சேரி நேரு யுவகேந்திராவில் இணைந்த இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் சிறந்த மாவட்ட இளைஞர் மன்ற விருதுக்கு வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின், புதுச்சேரி நேரு யுவகேந்திரா மூலம், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் இளைஞர் மன்றத்தை தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2019-2020ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட இளைஞர் மன்ற விருது வழங்கப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் நேரு யுவகேந்திரா, நெ.41, வெங்கடசுப்பா ரெட்டியார் தெரு, நுாறடி ரோடு, எல்லபிள்ளைச்சாவடி, என்.டி மஹால் அருகில், புதுச்சேரி 605 005. என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 24ம் தேதி மாலை 5.00 மணிக்குள் அலுவலகத்தில் தேவையான சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE