இந்தியா

மகிழ்ச்சி: புதுச்சேரியில் நிலத்தடி நீர் மட்டம் கிடுகிடு5 ஆண்டுகளுக்கு பின் 20 அடி உயர்ந்தது

Added : டிச 18, 2020
Share
Advertisement
புதுச்சேரி: வருண பகவானின் கருணையால், புதுச்சேரியில் நிலத்தடி நீர் மட்டம் 20 அடி அளவுக்கு உயர்ந்துள்ளது.வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், புதுச்சேரியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, 'நிவர்' புயல் காரணமாக 24 மணி நேரத்தில் 300 மி.மீ., மழையும், 'புரெவி' புயல் எதிரொலியாக 190 மி.மீ., மழையும் புதுச்சேரியில் கொட்டி தீர்த்தது.புதுச்சேரியின் ஆண்டு சராசரி
 மகிழ்ச்சி: புதுச்சேரியில் நிலத்தடி நீர் மட்டம் கிடுகிடு5 ஆண்டுகளுக்கு பின் 20 அடி உயர்ந்தது

புதுச்சேரி: வருண பகவானின் கருணையால், புதுச்சேரியில் நிலத்தடி நீர் மட்டம் 20 அடி அளவுக்கு உயர்ந்துள்ளது.வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், புதுச்சேரியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, 'நிவர்' புயல் காரணமாக 24 மணி நேரத்தில் 300 மி.மீ., மழையும், 'புரெவி' புயல் எதிரொலியாக 190 மி.மீ., மழையும் புதுச்சேரியில் கொட்டி தீர்த்தது.புதுச்சேரியின் ஆண்டு சராசரி மழையளவு, 1,200 மி.மீ., ஆகும். நேற்று முன்தினம்(16ம் தேதி) இரவு வரை, 1,560 மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. குறிப்பாக, வடகிழக்கு பருவமழை சீசனில் மட்டும் 1,120 மி.மீ., மழை பெய்துள்ளது குறிப்பிடத் தக்கது.ஆண்டு சராசரியை தாண்டி கூடுதலாக மழை பெய்து வருவதால், நிலத்தடி நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. புதுச்சேரி பகுதி முழுவதும் சராசரியாக 20 அடி அளவுக்கு (6 மீட்டர்) நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.குறிப்பாக, பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், பிள்ளையார்குப்பம் போன்ற பகுதிகளில் அதிகபட்சமாக 21 அடி அளவிற்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையில் செயல்படும் நிலத்தடி நீர் பிரிவு, புதுச்சேரி முழுவதும் 80 போர்வெல்களையும், காரைக்கால் பகுதியில் 45 போர்வெல்களையும் அமைத்து, நிலத்தடி நீர் வளம் குறித்து கண்காணித்து வருகிறது.அனைத்து போர்வெல்களிலும் ஆண்டுக்கு 4 முறை நிலத்தடி நீர் மட்டம் பரிசோதிக்கப்பட்டு, நீர் வளம் கணக்கிடப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு பின் தற்போது நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால், வரும் ஆண்டில் குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும், மற்ற பயன்பாடுகளுக்கும் பிரச்னை இருக்காது.நீர் மட்டம் உயர காரணம் என்ன?புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. மிகப் பெரிய ஏரியான ஊசுடு, இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரி ஆகியவை முழு கொள்ளளவை எட்டி விட்டன. மேலும், சங்கராபரணி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, புதுச்சேரியில் நீர் வளம் பெருகி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இது, அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.மனோகர், நீர் நிலவியலாளர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X