புதுச்சேரி; உயர்கல்வி பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்விக் கடனாக, ரூ.2 கோடியே 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை, முதல்வர் நாராயணசாமி வழங்கினார்.
கல்லுாரிகளில் மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மேற்படிப்பு பயிலும் ஆதி திராவிட மாணவ, மாணவிகளுக்கு, ஆதி திராவிடர் மேம்பாட்டுக் கழகம், தேசிய அட்ட வணை இனத்தவர் நிதி மேம்பாட்டுக் கழக திட்டம் இணைந்து, கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி சட்டசபையில் நடந்தது. முதல்வர் நாராயணசாமி, நலத்துறை அமைச் சர் கந்தசாமி ஆகியோர் பங்கேற்று, 315 மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனாக 1 கோடியே 97 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய், வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்கும் மாணவிக்கு ரூ.7 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 316 மாணவர்களுக்கு 2 கோடியே 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் கல்விக் கடன் வழங்கினர்.எம்.எல்.ஏ., விஜயவேணி, துறை செயலர் உதயகுமார், ஆதி திராவிடர் மேம்பாட்டுக கழக மேலாண் இயக்குனர் யஷ்வந்தையா உடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE