பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் இதுவரை 4,44,444 பேருக்கு பரிசோதனை

Added : டிச 18, 2020
Share
Advertisement
புதுச்சேரி; புதுச்சேரியில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 3,144 பேருக்கு பரிசோதனை செய்ததில், புதுச்சேரியில் - 21 பேர், காரைக்காலில் - 5, ஏனாம்-1, மாகியில் - 13 பேர் என மொத்தம் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37,622 ஆக

புதுச்சேரி; புதுச்சேரியில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 3,144 பேருக்கு பரிசோதனை செய்ததில், புதுச்சேரியில் - 21 பேர், காரைக்காலில் - 5, ஏனாம்-1, மாகியில் - 13 பேர் என மொத்தம் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37,622 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில் 204 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 103 பேர் என மொத்தம் 307 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று கொரோனா உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 622 ஆக நீடிக்கின்றது. இறப்பு விகிதம் 1.65 சதவீதமாக ஆக உள்ளது.நேற்று 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 36,693 (97.53 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 லட்சத்து, 44 ஆயிரத்து 444 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 4,02,434 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X