சென்னை: முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது எனவும், படங்கள் நாடகங்கள் மூலம் குடும்பங்களை, கமல்ஹாசன் சீரழிக்கிறார் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் முதல்வரின் பேட்டிக்கு பதிலளிக்கும் விதமாக, கமல் தனது டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களில், 'முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது' என பதிவிட்டுள்ளார். மேலும், 'சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை.... அவர் எப்போதும் வால் பிடிப்பார். 'எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என்ற எம்.ஜி.ஆர்., பாடல் வரிகளையும் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE