பொது செய்தி

தமிழ்நாடு

விக்கிரவாண்டி பகுதிகளில் கன மழை; வீடுகளில் வெள்ளம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக விளைந்த நெற்பயிர்கள் நீரில்மூழ்கி சேதமடைந்தும், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் ,விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக ஏரிகள் முழுவதும் நிரம்பி வழிய ஆரம்பித்தது. இதனால் ஆசூர் ஏரி முழுமையாக

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக விளைந்த நெற்பயிர்கள் நீரில்மூழ்கி சேதமடைந்தும், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் ,விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக ஏரிகள் முழுவதும் நிரம்பி வழிய ஆரம்பித்தது. இதனால் ஆசூர் ஏரி முழுமையாக நிரம்பி வழிந்து அருகில் இருந்த விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.இதேபோல் வாக்கூர், வேம்பி, பூங்குணம், குண்டலிபுலியூர் ,மேலக்கொந்தை, தென்பேர்பகுதிகளில் ஏரிகள் நிரம்பியும் பாதிப்புகள் ஏற்பட்டும் ,மேலக்கொந்தை - தென்பேர் சாலையில் வெள்ள நீர்திரண்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.வாக்கூர் மதுரா கிராமத்தில் உள்ள காமேஷ் என்பவரது விவசாய கிணறும், பனப்பாக்கம் உலகநாதன் விவசாய கிணறும் இடிந்து உள்வாங்கி சேதமடைந்தது. விக்கிரவாண்டி பாரதி நகர், வ.உ.சி.நகர், கக்கன் நகர் , கீழக்கொந்தை குடியிருப்பு பகுதிகளிலும், துணை மின் நிலையம், வட்டார வேளாண்மை அலுவலகத்திலும் வெள்ள நீர் சூழ்ந்தது.பாதிப்பு பகுதிகளை பி.டி.ஓ.,க்கள் நந்த கோபாலகிருஷ்ணன் , எழிலரசு ஆகியோர் தலைமையில் பணியாளர்கள்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.விக்கிரவாண்டிசெயல் அலுவலர் ேஷக் லத்தீப் பார்வையிட்டு மழை நீர் வடிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X