டி.வி., நல்லுார் பகுதியில் கன மழை: பயிர்கள் சேதம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் கனமழையால் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.திருவெண்ணெய்நல்லுார் வட்டாரத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், கரும்பு மற்றும் உளுந்து போன்றவற்றை சாகுபடி செய்துள்ளனர். தற்போது 5 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர் உள்ளது. மேலும் 7500 ஏக்கரில் உளுந்து சாகுபடி

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் கனமழையால் நெல், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.திருவெண்ணெய்நல்லுார் வட்டாரத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், கரும்பு மற்றும் உளுந்து போன்றவற்றை சாகுபடி செய்துள்ளனர். தற்போது 5 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர் உள்ளது. மேலும் 7500 ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதில் 1500 ஏக்கர் நெல் பயிரும், 2500ஏக்கர் உளுந்து பயிரும் நீரில் மூழ்கின. பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் வேளாண் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை மேற்கொண்டனர்.இந்நிலையில் திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் நெல் மற்றும் உளுந்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. எனவே விவசாயிகள் நலன்கருதி வேளாண்மைதுறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X