செஞ்சி; செஞ்சி பகுதியில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் செஞ்சி பகுதி ஏரிகள் நிரம்பியுள்ளது. நேற்று முன்தினம் இரவு செஞ்சி ஒன்றிய பகுதிகளில் கன மழைகொட்டியது. அனந்தபுரத்தில் 16.44 செ.மீ., மழை பெய்தது. அதே போல் செஞ்சி, செம்மேடு, வல்லத்தில் கன மழை பெய்தது.செஞ்சி ஒன்றியம் மற்றும் அனந்தபுரம் பகுதியில் பெய்த கனமழையால் மழவந்தாங்கல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. உபரி நீர் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு 200 ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.மழவந்தாங்கல் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரை தடுத்து நிறுத்த பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கீழ்மலை குடியிருப்பு பகுதியில் புகுந்த நீரை பேரூராட்சி நிர்வாகத்தினர் வெளியேற்றினர். மழை வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்கள் தங்குவதற்கு பள்ளி வளாகத்தை தயார் நிலையில் வைத்துள்ளனர். ஜெயங்கொண்டான், சோ.குப்பம். உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான நெல் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டன. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை தாசில்தார் ராஜன் பார்வையிட்டார்.வெங்காயம் பாதிப்புசெஞ்சி தாலுகா நெல்லிமலை, நடுநெல்லிமலை, பாடிபள்ளம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்கின்றனர். பலத்த மழை காரணமாக மலைகளில் வெள்ளம் ஏற்பட்டதால் நிலங்களில் ஊற்று எடுத்து வெங்காய செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE