வானூர்; கிளியனூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பைக்கை, அப்பகுதி இளைஞர்கள் துணிச்சலுடன் ஆற்றில் இறங்கி மீட்டனர்.கிளியனூர் அருகேயுள்ள கொந்தமூர் ஏரி நேற்று பெய்த கன மழையில், முழுமையாக நிரம்பி, நீரேற்றத்தில் இருந்து கொந்தமூர் ஆறு வழியாக கழுவெளிக்கு செல்கிறது. இதனால் கொந்தமூரில் இருந்து நல்லாளம், பெருமுக்கல் செல்லும் சாலையின், குறுக்கில் செல்லும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலத்திற்கு மேல் மழைநீர் புரண்டு ஓடியதால் தரைப்பாலம் இருக்கும் இடம் தெரியாமல் போனதுஇதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 11:00 மணிக்கு, நல்லாளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பைக்கில், தரைப்பாலத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, வெள்ளத்தில் அவரது பைக் இழுத்துச்செல்லப்பட்டது. இளைஞர் தப்பி கரைசேர்ந்தார். உடன் கொந்தமூர், நல்லாளம் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கயிற்றின் மூலம் ஆற்றில் இறக்கி பைக்கை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். 20 அடி தூரத்தில் சிக்கி இருந்த பைக்கை மீட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE