திண்டிவனம்; தொடர் மழை காரணமாக திண்டிவனம் அடுத்த மயிலம், கொல்லியங்குணம், விளங்கம்பாடி, நல்லாவூர் ஆகிய இடங்களிலுள்ள ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், கீழ்பேரடிக்குப்பம் ஏரிக்கு அதிக அளவில் வந்ததால் நேற்று காலை 10.30 மணிக்கு ஏரியின் மதகு உடைந்தது. இதனால் ஏரி நீர் வெள்ளம் போல் கரைபுரண்டு கீழ்பேரடிக்குப்பத்திலுள்ள வீடுகளுக்குள் புகுந்தது. மக்கள் பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். ஏரியிலிருந்து வெளியேறிய தண்ணீரால் கீழ் எடையாளம், தென்களவாய், கீழ்பேரடிக்குப்பம், வேங்கை ஆகிய இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வரகு, மணிலா, உளுந்து, நெல் ஆகிய பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.பல இடங்களில் பயிர்கள் உபரி நீர் அடித்து சென்றுவிட்டது. இதன் காரணமாக சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளது.ஏரியின் மதகு உடைந்ததால் பாதிப்பு பகுதிகளை, திண்டிவனம் எம்.எல்.ஏ., சீத்தாபதிசொக்கலிங்கம், விழுப்புரம் எஸ்.பி.,ராதாகிருஷ்ணன், தாசில்தார் செல்வம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE