சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காணாமல் போனவர் மர்ம சாவு அழுகிய நிலையில் உடல் மீட்பு

Added : டிச 18, 2020
Share
Advertisement
ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே காணாமல் போன நபர், மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த தொழுவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளு. இவருக்கு சொந்தமான பெரியக்கொள்ளியூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் உடல் மிதப்பதாக பகண்டைகூட்ரோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே காணாமல் போன நபர், மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த தொழுவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளு. இவருக்கு சொந்தமான பெரியக்கொள்ளியூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் உடல் மிதப்பதாக பகண்டைகூட்ரோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் இளையனார்குப்பம் காலனியைச் சேர்ந்த கண்ணன், 65; என்பதும், உடல் நிலை சரியில்லாததால் 2 மாதங்களாக மனநிலை பாதித்த நிலையில் இருந்துள்ளார்.இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி காணாமல் போன கண்ணனை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தது தெரியவந்தது.புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து கண்ணன் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X