மதுரை : மதுரை தொழிலாளர் நல இணை கமிஷனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: தொழிலாளர் நலநிதிச் சட்டத்தின் படி தொழற்சாலை, மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், ஐந்தும் மற்றும் அதற்கு மேல் தொழிலாளர் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்கள் தொழிலாளரின் பங்காக ரூ.10, நிறுவனம் பங்காக ரூ.20 என மொத்தம் ரூ.30 வீதம் 2020 ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதிப் பங்குத் தொகையாக வரும் ஜன.,31க்குள் நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
இணையவழியில் www.lwb.tn.gov.in என்ற வெப்சைட் மூலம் செலுத்தலாம். மேலும் 'The secretary, tamil nadu labour welfare board Chennai-600 006' என்ற வங்கி பெயருக்கு காலேசாலையாக 'செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ்., வளாகம், தேனாம்பேட்டை சென்னை - 600 006' என்ற முகவரிக்கும் அனுப்பலாம், என தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE