தமிழ்நாடு

துண்டிப்பு; மாவட்டத்தில் கன மழையால் போக்குவரத்து...அதிகளவாக மணம்பூண்டியில் 174 மி.மீ., பதிவு

Added : டிச 18, 2020
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெய்த மழையால், தரைப்பாலம் துண்டிக்கப்பட்டு 30 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையானது, நவம்பர் மாதம் துவங்கி பெய்து வருகின்றது. இதில், நிவர் புயலால் பெய்த மழையால், ஏரி, குளங்கள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து துவங்கியது.
 துண்டிப்பு; மாவட்டத்தில் கன மழையால் போக்குவரத்து...அதிகளவாக மணம்பூண்டியில் 174 மி.மீ., பதிவு

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெய்த மழையால், தரைப்பாலம் துண்டிக்கப்பட்டு 30 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையானது, நவம்பர் மாதம் துவங்கி பெய்து வருகின்றது. இதில், நிவர் புயலால் பெய்த மழையால், ஏரி, குளங்கள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து துவங்கியது. மாவட்டத்தின் இயல்பான மழையளவு 1,060 மி.மீட்டரில், தென்மேற்கு பருவமழை 320.49 மி.மீ., பெய்துள்ளது.இதையடுத்து, நிவர் புயலால் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 506 ஏரிகளில், 62 ஏரிகள் முழு அளவில் நிரம்பியது. இதை தொடர்ந்து, புரெவி புயலின்போது, மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் 97 ஏரிகள் நுாறு சதவீதம் நிரம்பியது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்தது.

அதன்படி, விழுப்புரத்தில் 84.30 மி.மீ., கோலியனுாரில் 79 மி.மீ., வளவனுாரில் 89 மி.மீ., கெடாரில் 156 மி.மீ., முண்டியம்பாக்கத்தில் 82 மி.மீ., நேமூரில் 90 மி.மீ., கஞ்சனுாரில் 88 மி.மீ., சூரப்பட்டில் 92 மி.மீ., வானுாரில் 69 மி.மீ., திண்டிவனத்தில் 71 மி.மீ., மரக்காணத்தில் 72 மி.மீ., செஞ்சியில் 48 மி.மீ., செம்மேட்டில் 60 மி.மீ., வல்லத்தில் 50 மி.மீ., அனந்தபுரத்தில் 164.40 மி.மீ., அவலுார்பேட்டையில் 43 மி.மீ., வளத்தியில் 45 மி.மீ., மணம்பூண்டியில் 174 மி.மீ., முகையூரில் 160 மி.மீ., அரசூரில் 45 மி.மீ., திருவெண்ணெய்நல்லுாரில் 40 மி.மீ., மழை பதிவாகியது. மாவட்டத்தில் சராசரியாக 85.82 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.மாவட்டத்தில் அதிகளவாக மணம்பூண்டியில் 174 மி.மீ., குறைந்தளவாக திருவெண்ணெய்நல்லுாரில் 40 மி.மீ ., மழை பெய்துள்ளது.கன மழையின் காரணமாக மாவட்டத்தில் 269 ஏரிகள் நுாறு சதவீதமும், 134 ஏரிகள் 75 சதவீதமும், 76 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.

மேலும், 24 ஏரிகள் 50 சதவீதத்திற்கு குறைவாகவும், 3 ஏரிகள் 25 சதவீதத்திற்கு குறைவாக நீர் பிடிப்பு ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் நேற்றிரவு ஒரே நாளில் பெய்த கன மழையால், ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகின்றது. இதனால், பம்பை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் அடுத்த அகரம் சித்தாமூர் பம்பை ஆற்று தரைப்பாலம் தண்ணீரில் உடைந்து சேதமடைந்தது.

இதனால், அவ்வழியாக செல்லும் 30 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்று வழியில் செல்லவும் என நெடுஞ்சாலை துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அங்கு எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க, காணை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதேபோன்று, அனுமந்தபுரம் கிராம தரைப்பாலத்தின் மீது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மேலும், காணை, கெடார், அனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய பயிர்களில் மழைநீர் சூழ்ந்தது.இதேபோன்று, விழுப்புரம் புதிய பஸ் நிலையம், பழைய கோர்ட் சாலை, நகராட்சி மைதானத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. ஒரே நாள் மழையால், விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்கள் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X