திருக்கோவிலுார்; தென்பெண்ணையாற்றில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.தென்பெண்ணையாறு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.குறிப்பாக துரிஞ்சல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆற்றின் குறுக்கே திருக்கோவிலுாரையும், அரகண்டநல்லுாரையும் இணைக்கும் வகையில் உள்ள தரைப்பாலத்தின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட போலீசார் தங்கள் எல்லைப் பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்தி தரைப் பாலத்தின் வழியாக யாரும் செல்லாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.திருக்கோவிலுார் அணைக்கட்டில் நேற்று மதியம் 1:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் சென்று கொண்டிருந்தது.சாத்தனுார் அணைதென்பெண்ணையின் குறுக்கே முக்கிய அணையாக இருப்பது திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணைக்கட்டு. அணையில் 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவில், நேற்று காலை நிலவரப்படி 3,574 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால், அணைக்கு வினாடிக்கு 243 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.சங்கராபுரம்சங்கராபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்குத் துவங்கிய கனமழை நேற்று காலை 7:00 மணி வரை கொட்டித் தீர்த்தது. கல்வராயன்மலையில் பெய்த மழையால், நேற்று காலை மணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஏரிகளும் நீரம்பி வழிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE