தமிழ்நாடு

மூழ்கின; 150க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள்...ஓடை அடைப்பால் கிராமத்திற்குள் வெள்ளம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; கோமுகி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பாப்பாங்கால் ஓடை அடைப்பால் புத்தந்துார் கிராமத்தில் வெள்ள நீர் புகுந்ததில் 150க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பொன்பரப்பட்டு, செம்படாக்குறிச்சி, செல்லியம்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஏரிகள்
 மூழ்கின;  150க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள்...ஓடை அடைப்பால் கிராமத்திற்குள் வெள்ளம்

கள்ளக்குறிச்சி; கோமுகி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பாப்பாங்கால் ஓடை அடைப்பால் புத்தந்துார் கிராமத்தில் வெள்ள நீர் புகுந்ததில் 150க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.

கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பொன்பரப்பட்டு, செம்படாக்குறிச்சி, செல்லியம்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி, பாப்பாங்கால் ஓடை மற்றும் புத்தந்துார் கிராம ஓடைகள் வழியாக வெளியேறுகிறது.பாப்பாங்கால் ஓடை வழியாக மணிமுக்தா அணைக்கும், புத்தந்துார் கிராம ஓடை வழியாக ஆலத்துார் ஏரிக்கும் தண்ணீர் செல்கிறது. 125 அடி அகலம் கொண்ட பாப்பாங்கால் ஓடையின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல இடங்களில் துார்ந்துள்ளன.இந்நிலையில், கோமுகி அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. கொள்ளளவைத் தாண்டி நீர் வரத்து இருந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்அதிகப்படியாக வெளியேற்றப்பட்ட நீர் வழியில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்பி ஓடைகள் வழியாக பாய்ந்தது. ஆக்கிரமிப்பு மற்றும் துார்ந்த பாப்பாங்கால் ஓடை வழியாக நீர் செல்ல முடியாததால், புத்தந்துார் ஓடை வழியாக வெள்ள நீர் ஆர்ப்பரித்து ஓடியது.திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு புத்தந்துார் கிராமத்திற்குள் புகுந்தது. அங்குள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகள், 150க்கும் மேற்பட்ட நெல், கரும்பு சாகுபடி செய்யப்பட்ட வயல்களைச் சூழ்ந்தது.சாலை முழுமையும் வெள்ள நீர் சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

சப் கலெக்டர் பார்வைதகவலறிந்த கள்ளக்குறிச்சி சப் கலெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் பி.டி.ஓ., ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் புத்தந்துார் கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பாப்பாங்கால் ஓடை ஆக்கிரமிப்பின் காரணமாகத்தான் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது எனவும்; தண்ணீர் வடிய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.பொதுமக்கள் அதிரடிஇதே போன்ற, க.மாமனந்தல் அண்ணா நகர் மற்றும் விளாந்தாங்கல் ஜெயா கார்டன் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் அப்பகுதி மக்களே ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மழை நீரை வெளியேற்றுவதற்கான அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதேபோன்று, தச்சூர் காந்தி நகர் பகுதியிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.பயிர்கள் மூழ்கினநெற்பயிர்கள், மக்காச்சோளம், உளுந்து, பருத்தி செடிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. விவசாய நிலங்களில் புகுந்துள்ள தண்ணீரை விவசாயிகள் கடும் சிரமங்களுக்கு இடையே வெளியேற்றி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி ஜெ.ஜெ., நகர் மற்றும் காரனுார், விளம்பாவூர், தச்சூர், தென்கீரனுார் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து வருவதால் பயிர்கள் பாழாகும் நிலை இருப்பதால் விவசாயிக்ள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X