சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள் .

Added : டிச 18, 2020
Share
Advertisement
போக்சோவில் கைதுஅலங்காநல்லுார்: காந்திகிராமம் பாலசுப்பிரமணி மகன் வல்லரசு 20. இவர் அலங்காநல்லுார் பகுதி 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். சிறுமி பெற்றோர் புகாரில் போலீசார் விசாரித்து வல்லரசை போக்சோவில்கைது செய்தனர்.* வாடிப்பட்டி: மதுரை சமயநல்லுார் காந்திநகர் கண்ணன் 23. இவரை அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 'போக்சோ'

போக்சோவில் கைது

அலங்காநல்லுார்: காந்திகிராமம் பாலசுப்பிரமணி மகன் வல்லரசு 20. இவர் அலங்காநல்லுார் பகுதி 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். சிறுமி பெற்றோர் புகாரில் போலீசார் விசாரித்து வல்லரசை போக்சோவில்கைது செய்தனர்.

* வாடிப்பட்டி: மதுரை சமயநல்லுார் காந்திநகர் கண்ணன் 23. இவரை அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 'போக்சோ' சட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய் கைது செய்தார்.

சிறுமி கர்ப்பம்: வாலிபர் கைது

திருமங்கலம்: 17 வயது சிறுமி,தாயாருடன் தனக்கன்குளம் காளவாசலில் வேலை செய்து வந்தார். சிறுமிக்கும் தனக்கன்குளம் சுகதேவ்க்கும் 29, திருமண நிச்சயம் முடிந்தது. சிறுமிக்கு 18 வயது நிரம்பியுடன் திருமணம் செய்ய முடிவானது. வயிற்றுவலியில் துடித்த சிறுமியை மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது கர்ப்பமுற்றிருப்பது தெரிந்தது. முழுவளர்ச்சியடையாத நிலையில் இருந்த கரு அகற்றப்பட்டது. கர்ப்பத்திற்கு காரணமான சுகதேவ்வை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி மாயம்

கள்ளிக்குடி: டி.வளையங்குளம் தண்டீஸ்வரனின் 17 வயது மகள் திருமங்கலம் தனியார்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா பரவலால் வீட்டில் இருந்த அவர் மாயமானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

விளக்கு ஏற்றும் போது தீப்பற்றி பெண் பலி

ஆஸ்டின்பட்டி: தனக்கன்குளம் கணேசன் மகள் நிரஞ்சனாவுக்கும் 28, திருமங்கலம் ராஜ்குமாருக்கும் 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்துவேறுபாடால் நிரஞ்சனா தந்தை வீட்டில் வசித்தார். சில நாட்களுக்கு முன் வீட்டில் விளக்கேற்றும் போது நைட்டியில் தீப்பற்றியது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வயிற்றை அறுத்து தற்கொலை

அவனியாபுரம்: பைபாஸ் ரோடு கணேசன் 44. இருவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் குடும்ப பிரச்னையில் மனைவி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கணேசன் தனியாக இருந்தார். நேற்று காலை கணேசன் வீட்டிற்கு அவரது தாயார் சென்ற போது, வயிற்றில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில் கடன் பிரச்னை, மனைவி கோபித்து கொண்டு சென்றதால் தற்கொலை செய்தது தெரிந்தது.

சூதாடிய 5 பேர் கைது

மேலுார்: மேலுார் வாச்சாம்பட்டி பகுதியில் கீழவளவு போலீசார் ரோந்து சென்றனர். பணம் வைத்து சூதாடிய அதே ஊரை சேர்ந்த மாணிக்கம் 50, வாழமலை 55, சின்னையா 55, குமார் 35, கணேசன் 65 உள்ளிட்ட 5 பேரை கைது செய்து ரூ. 200 பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X