மதுரை : ''தமிழ் மொழியை பள்ளி மாணவர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டும்,'' என மதுரை ஒத்தக்கடை மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுழைவு வாயிலுக்கு அடிக்கல் நாட்டி உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தினார்.
விழாவில் அவர் பேசுகையில், “தமிழ் மொழியை பள்ளியில் இருந்தே ஆழ்ந்து படிக்க வேண்டும். உலகை தெரிந்து கொள்ள ஆங்கில மொழி திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்,” என்றார். மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடையே கலந்துரையாடினார்.
சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமை வகித்தார். டி.இ.ஓ., பங்கஜம், கூடுதல் உதவி திட்ட அலுவலர் திருஞானம், வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, மாவட்ட நலக்குழு உறுப்பினர் மலைச்சாமி பங்கேற்றனர். தலைமையாசிரியர் சசித்ரா வரவேற்றார். ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE