புதுடில்லி : முப்படைகளுக்கு, 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை, உள்நாட்டில் கொள்முதல் செய்வதற்கு, ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ராணுவ அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் தலைமையில், ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து, முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் வாங்கப்பட உள்ளன. இதற்காக, ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 'மேக் இன் இந்தியா' மற்றும் தற்சார்பு இந்தியா திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE