பெருங்குடி : மதுரை விமான நிலையத்தில் விமான தள சுற்றுச்சூழல் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
கலெக்டரின் பிரதிநிதியாக ஆர்.டி.ஓ. சவுந்தர்யா தலைமை வகித்தார். விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி, மாசுகட்டுப்பாடு, போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்திய விமானங்கள் சட்டம் 1937ன்படி விமான நிலையத்தை சுற்றி 10 கி.மீ., சுற்றளவிற்குள் பறவைகள் பறப்பதை கட்டுப்படுத்துவது, அவற்றின் செயல்பாடுகள், வருகையை குறைப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவது, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE