விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம்

Added : டிச 18, 2020
Share
பெருங்குடி : மதுரை விமான நிலையத்தில் விமான தள சுற்றுச்சூழல் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.கலெக்டரின் பிரதிநிதியாக ஆர்.டி.ஓ. சவுந்தர்யா தலைமை வகித்தார். விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி, மாசுகட்டுப்பாடு, போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்திய விமானங்கள் சட்டம் 1937ன்படி விமான நிலையத்தை சுற்றி 10 கி.மீ., சுற்றளவிற்குள் பறவைகள் பறப்பதை

பெருங்குடி : மதுரை விமான நிலையத்தில் விமான தள சுற்றுச்சூழல் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

கலெக்டரின் பிரதிநிதியாக ஆர்.டி.ஓ. சவுந்தர்யா தலைமை வகித்தார். விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி, மாசுகட்டுப்பாடு, போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்திய விமானங்கள் சட்டம் 1937ன்படி விமான நிலையத்தை சுற்றி 10 கி.மீ., சுற்றளவிற்குள் பறவைகள் பறப்பதை கட்டுப்படுத்துவது, அவற்றின் செயல்பாடுகள், வருகையை குறைப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவது, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X