பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் என்.எல்.சி., நிறுவன நில எடுப்பிற்கு எதிர்ப்பு அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கீழ்வளையமாதேவி ஊராட்சித் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பரமசிவம், அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர் அப்பாதுரை, பாசன விவசாயிகள் சங்க தலைவர் செல்வமணி, வி.சி.க., ஒன்றிய செயலாளர் சாமிநாதன், ஸ்ரீமுஷ்ணம் த.வா.க., ஒன்றிய செயலாளர் தமிழரசன்,

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் என்.எல்.சி., நிறுவன நில எடுப்பிற்கு எதிர்ப்பு அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கீழ்வளையமாதேவி ஊராட்சித் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பரமசிவம், அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர் அப்பாதுரை, பாசன விவசாயிகள் சங்க தலைவர் செல்வமணி, வி.சி.க., ஒன்றிய செயலாளர் சாமிநாதன், ஸ்ரீமுஷ்ணம் த.வா.க., ஒன்றிய செயலாளர் தமிழரசன், பா.ம.க., நிர்வாகிகள் வையாபுரி, மோகன், கலிய மூர்த்தி, செல்வக்குமார் முன்னிலை வகித்தனர்.த.வா.க., மாநில மதியுரை குழு தலைவர் பாலகுருசாமி, பா.ம.க., உழவர் பேரியக்க துணைத் தலைவர் சிட்டிபாபு, த.வா.க., மாவட்ட செயலாளர் சேரலாதன், அ.ம.மு.க., மண்டலபொறுப்பாளர் மாவட்ட செயலாளர் பாலமுருகன், வீரசோழன் பேசினர்.நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் 44 கிராமங்களை கையகப்படுத்தி 3 வது சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும். என்.எல்.சி., நிறுவனத்திற்கு விவசாயிகள் அனைவரும் நிலம் கொடுக்க மாட்டோம் என உறுதியேற்பது. ஏற்கனவே கையப்படுத்திய நிலங்களுக்கு என்.எல்.சி., நிறுவனம் உரிய தொகைகளை தர வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் பாலமுருகன், சங்கர், அ.ம.மு.க., புவனகிரி தொகுதி குழு பொறுப்பாளர் சீத்தாராமன், ஒன்றிய செயலாளர்கள் முல்லைக்கோவன், ஜெயச்சந்திரன், தர்மநல்லுார் ஊராட்சித் தலைவர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X