சேத்தியாத்தோப்பு; புவனகிரி சட்டசபை தொகுதிக்கு பா.ஜ., அமைப்பாளராக மேற்கு மாவட்ட தலைவர் இளஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.சட்டசபை தேர்தல் பணிகளை கண்காணிக்க பா.ஜ., சார்பில் அமைப்பாளர்கள், பொறுப்பாளர் களை மாநில தலைவர் முருகன் நியமித்து வருகிறார். புவனகிரி சட்டசபை தொகுதி அமைப்பாளராக கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் இளஞ்செழியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தலைவர் இளஞ்செழியனுக்கு மாவட்ட நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர், பூத்கமிட்டி உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE