மதுரை: மதுரையில் போலி ஆவணங்கள் தயாரித்து பல்வேறு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெயரில் கடன் பெற்று மோசடி செய்த புரோக்கர்கள் குறித்து விசாரிக்க தமிழக முதல்வர் தனிப்பிரிவு உத்தரவிட்டுள்ளது.
கந்து வட்டி முறையை ஒழிக்க மகளிர் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் வங்கிகள் கடன் வழங்குகின்றன. வங்கி கடனுக்கு மாதத் தவணை செலுத்த வேண்டியதால் பெரும்பாலான மகளிர் குழுக்கள் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுனங்களில் 24 சதவீதம் வட்டியில் கடன் பெற்று 15 நாட்கள் அல்லது வாரத் தவணையாக செலுத்துகின்றன.
பைனான்ஸ் நிறுவனத்திற்கும் மகளிர் குழுக்களுக்கும் இடையே செயல்பட்ட புரோக்கர்கள் பலர் கடன் பெற்றுத் தருவதில் கமிஷன் பெற்று வந்தனர். மேலும் போலி ஆவணங்கள் மூலம் சம்மந்தப்பட்ட குழுக்களுக்கு தெரியாமல் அக்குழுக்கள் பெயரில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் ரூ.பல லட்சம் ரூபாய் கடன் பெற்று முறைகேடு செய்தனர். நிறுவன அதிகாரிகள் ஆய்வில் இது தெரிந்தது.
நகரில் திருப்பாலை, அனுப்பானடி உள்ளிட்ட பல்வேறு பகுதி புரோக்கர்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவன அமைப்பாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார்கள் அனுப்பின. இதுகுறித்து கலெக்டர், தென் மண்டல ஐ.ஜி., எஸ்.பி., ஆகியோர் விசாரிக்க முதல்வர் தனிப்பிரிவு உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE