விருத்தாசலம் - 'தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற வீடியோ கான்பரன்ஸ் பொதுக் கூட்டம் நேற்று மாலை விருத்தாசலத்தில் நடந்து.நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக் குமார், மாவட்ட இலக்கிய அணி தட்சிணாமூர்த்தி, நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள்குமார், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அன்சர் அலி மற்றும் உதயநிதி நற்பணி மன்ற பொருளாளர் இளையராஜா, தொண்டரணி அறிவுடைநம்பி, வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், சரவணன், நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, செங்குட்டுவன், குமார், சரவணன், ராஜா, பக்கிரிசாமி உட்பட பலர் பங்கேற்றனர். மூத்த நிர்வாகிகள் மற்றும் நலிவுற்றோர் 20 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.மேற்கு மாவட்ட தி.மு.க., மற்றும் சார்பு அணிகள் சார்பில் நடந்த கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கதிரவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார், துணை செயலாளர் நம்பிராஜன், பொருளாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி பழனிசாமி, வர்த்தக அணி வெங்கடேசன், நிர்வாகிகள் மூர்த்தி, காந்தி, துரை வாசுதேவன், மனோகரன், ஐ.டி., அணி அமைப்பாளர்கள் ஸ்ரீதர், கிருஷ்ணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.பெரியவடவாடியில், விருத்தாசலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமையில், ஒன்றிய தலைவர் சிவசங்கரன், இலக்கிய அணி கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், சிவக்குமார், இளைஞரணி அமைப்பாளர் தர்மமணிவேல், துணை அமைப்பாளர்கள் வசந்தகுமார், ராஜவேல், திருஞானம், சண்முகம், சுபாஷ், பிரபு, பாரதி, ஜனார்த்தனன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE