நெல்லிக்குப்பம் - நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையில் கரும்பு அறவை துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். ஆலை உதவி துணைத் தலைவர்கள் ராமசுப்ர மணியன், சங்கரலிங்கம், பொது மேலாளர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.உதவி துணைத்தலைவர் சங்கரலிங்கம் கூறுகையில், நடப்பு பட்டத்தில் 5 லட்சம் டன் கரும்பு அறவை செய்ய திட்டமிட்டுள்ளோம்.விவசாயிகளுக்கு கரும்பு பணத்தை 15 நாட்களுக்குள் ஒரே தவணையில் வழங்குகிறோம். கரும்புக்கு மட்டுமே நிலையான விலை உள்ளது. ஆட்கள் தேவையை குறைக்க 5 அடி இடைவெளியில் கரும்பு பயிரிட்டால் நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்களை பயன்படுத்த முடியும்.சொட்டுநீர் முறையை கடைபிடித்தால் தண்ணீர் ,உரம் தேவை குறையும். மகசூல் அதிகரிக்கும். எனவே விவசாயிகள் புதிய தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி கரும்பு பயிரிட்டு அதிக லாபம் பெறலாம்.மேலும் ஜனவரி மாதத்துக்குள் குறிப்பிட்ட ரக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 7,000 முதல் 20 ஆயிரம் வரை மானியம் வழங்குகிறோம்.இதை பயன்படுத்தி விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன் பெறலாமென கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE