வேப்பூர் - வேப்பூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சாலையை கடக்கும் மக்களை ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை செய்ய வேண்டும்.வேப்பூரில், ஊராட்சிக்கு சொந்தமான 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இதன் மூலம் 100 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், 50 ஏக்கர் விளை நிலங்கள் மறைமுகமாகவும் பயனடைகிறது.நிவர், புரெவி புயல்களின் போது பெய்த கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து இருந்தது. அப்போது, சிறு நெசலுார் ஏரி உடைந்து, தண்ணீர் வேப்பூர் ஏரிக்கு வந்ததால் பெரிய ஏரி நிரம்பியது. இரு தினங்களாக பரவலாக மழை பெய்வதால், ஏரியின் இரண்டு வாய்க்காலிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பெரிய ஏரியிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.ஆபத்தை உணராத அப்பகுதி சிறுவர்கள், இளைஞர்கள் தண்ணீர் செல்லும் வழியில் விளையாடி கொண்டும், வாகனங்களில் சென்றும் வருகின்றனர். சிலர் பரிசல் படகு மூலம் ஏரிக்குள் சென்று சுற்றுகின்றனர். ஏரிக்கு செல்லும் சாலையை அடைத்து சிறுவர்கள், இளைஞர்கள் ஏரிக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE