விருத்தாசலம் = விருத்தாசலத்தில் அரசு பள்ளி வகுப்பறை கட்டடங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில், வகுப்புகள் துவங்கப்படாத நிலையில், பள்ளி வளாகத்தில் செடிகள் வளர்ந்துள்ளன. தொடர் மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. வகுப்பறை கட்டடங்களுக்கு அருகில் மரங்கள் வளர்ந்து, சுவர்களில் வேர் படர்ந்து வளர்ந்துள்ளன.விருத்தாசலம் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கான புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் பராமரிக்கும் வகுப்பறை கட்டடங்களில் ஆலம், அரச மர விழுதுகள் வேரூன்றி வளர்ந்துள்ளது. இவற்றால் கட்டடம் விரைவில் வழுவிழந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது. ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE