பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சுவர் அமைக்கநடவடிக்கை தேவை

Added : டிச 18, 2020
Share
Advertisement
புதுச்சத்திரம் ; புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனை சுற்றிலும் சுற்றுச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிதம்பரம் உட்கோட்டம் புதுச்சத்திரத்தில் கடந்த 1983ம் ஆண்டு போலீஸ் ஸ்டேஷன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 20 தாய்க்கிராமங்கள், 35 குக்கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் வாடகை கட்டடத்தில் இயங்கிய போலீஸ் ஸ்டேஷன், கடந்த 2012 ம் ஆண்டு முதல் சொந்த கட்டத்தில்

புதுச்சத்திரம் ; புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனை சுற்றிலும் சுற்றுச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிதம்பரம் உட்கோட்டம் புதுச்சத்திரத்தில் கடந்த 1983ம் ஆண்டு போலீஸ் ஸ்டேஷன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 20 தாய்க்கிராமங்கள், 35 குக்கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் வாடகை கட்டடத்தில் இயங்கிய போலீஸ் ஸ்டேஷன், கடந்த 2012 ம் ஆண்டு முதல் சொந்த கட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த ஸ்டேஷன் வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லை.இதனால் பகல் நேரங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகள் ஸ்டேஷன் வளாகத்தின் உள்ளே சென்று, அசுத்தம் செய்கின்றன. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் ஸ்டேஷன் வளாகத்தில் படையெடுப்பதால், இரவு நேரங்களில் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X