திட்டக்குடி - திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்தில், வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் மழைநீர் வெளியேற வழியின்றி தெருவில் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தில் வடிகால் வாய்க்கால் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் வெளியேற வழியின்றி தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்றது. பொதுமக்கள் புகாரைத் தொடர்ந்து வடிகால் வாய்க்கால் சீரமைக்கப்பட்டது. வடிகால் வாய்க்கால் சீரமைப்பு முழுமையாக முடியாததால் மழைநீர் தேங்கி மக்கள் அவதியடைகின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் வடிகால் வாய்க்காலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE