சோலார் பம்ப்க்கு மானியம்திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில், சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப் செட் அமைக்க, மானியம் வழங்கப்பட உள்ளது. அரசு பங்களிப்பாக, 70 சதவீதம் மானியம் வழங்கப்படும்.அதே போல், சூரிய ஒளி மின்வேலி அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஆர்வம் உள்ள விவசாயிகள், திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளில் இயங்கும், உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது, மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு, கலெக்டர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.கண் சிமிட்டும் மின்விளக்குஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில், பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள், இந்த பஸ் நிலையத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.இதனால், இரவு, பகல் எந்நேரமும், இங்கு பயணியர் நடமாட்டம் உள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில், உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக, இந்த விளக்கில், ஒரு சில எல்.இ.டி.,கள் மட்டுமே ஒளிர்கின்றன.இதனால், பஜார் பகுதியை இருள் சூழ்ந்துள்ளது. இரவு நேரத்தில், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணியர் அச்சத்தில் தவிக்கும் நிலை உள்ளது. உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.442 பேருக்கு கோழிகுஞ்சு வழங்கல்திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், தாழவேடு, பூனிமாங்காடு, நல்லாட்டூர், சிவாடா, கனகம்மாசத்திரம், குப்பம்கண்டிகை, அரிச்சந்திராபுரம், திருவாலங்காடு, பழையனுார், வியாசபுரம் மற்றும் வீரராகவபுரம் ஆகிய ஊராட்சிகளில், கால்நடை துறையின் மூலம், நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன் தலைமை வகித்தார்.இதில், திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், திருவாலங்காடு ஒன்றிய சேர்மன் ஜீவா ஆகியோர் பங்கேற்று மொத்தம், 442 பயனாளிகளுக்கு, தலா, 25 கோழி குஞ்சுகள் வீதம் வழங்கினர்.நிகழ்ச்சியில், கால்நடை மருத்துவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.கல்வி உதவித்தொகைதிருவள்ளூர்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்; தனியார் தொழிற்கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.விண்ணப்ப படிவங்களை, தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே, பெற்று பூர்த்தி செய்து வழங்கவும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், விண்ணப்பத்தினை பெற்று, வரும், 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகலாம் என, கலெக்டர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.'சோலார் பம்ப்'க்கு மானியம்திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில், சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்ப் செட் அமைக்க, மானியம் வழங்கப்பட உள்ளது. அரசு பங்களிப்பாக, 70 சதவீதம் மானியம் வழங்கப்படும்.அதே போல், சூரிய ஒளி மின்வேலி அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். விவசாயிகள், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி பகுதிகளில் இயங்கும், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு, கலெக்டர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.கண் சிமிட்டும் மின் விளக்குஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியில், பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள், இந்த பஸ் நிலையத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், இரவு, பகல் எந்நேரமும், இங்கு பயணியர் நடமாட்டம் உள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில், உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக, இந்த விளக்கில், ஒரு சில எல்.இ.டி.,கள் மட்டுமே ஒளிர்கின்றன.இதனால், பஜார் பகுதியை இருள் சூழ்ந்துள்ளது. இரவு நேரத்தில், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணியர் அச்சத்தில் தவிக்கும் நிலை உள்ளது. உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.442 பேருக்கு கோழி குஞ்சு வழங்கல்திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், தாழவேடு, பூனிமாங்காடு, நல்லாட்டூர், சிவாடா, கனகம்மாசத்திரம், குப்பம்கண்டிகை, அரிச்சந்திராபுரம், திருவாலங்காடு, பழையனுார், வியாசபுரம் மற்றும் வீரராகவபுரம் ஆகிய ஊராட்சிகளில், கால்நடை துறையின் மூலம், நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன் தலைமை வகித்தார். இதில், திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், திருவாலங்காடு ஒன்றிய சேர்மன் ஜீவா ஆகியோர் பங்கேற்று, 442 பயனாளிகளுக்கு, தலா, 25 கோழி குஞ்சுகள் வீதம் வழங்கினர். கால்நடை மருத்துவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.கல்வி உதவித்தொகைதிருவள்ளூர்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்; தனியார் தொழிற்கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.விண்ணப்ப படிவங்களை, தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே, பெற்று பூர்த்தி செய்து வழங்கவும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், விண்ணப்பத்தினை பெற்று, வரும், 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகலாம் என, கலெக்டர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE