சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் சாவில் மர்மம் கணவர் உட்பட மூவர் கைது

Added : டிச 18, 2020
Share
Advertisement
பள்ளிப்பட்டு - கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த மனைவியை, அவரது கணவர் ஏமாற்றி அழைத்து சென்ற நிலையில், இளம்பெண் இறந்தார்.கணவர், மைத்துனன், மாமனார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மாமியாரை தேடி வருகின்றனர்.பள்ளிப்பட்டு, ஆஞ்சநேயா நகரை சேர்ந்தவர் பத்ரய்யா மகள், திவ்யா, 23. இவருக்கும், கர்லம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் சந்திரபோஸ், 25, என்பவருக்கும்,

பள்ளிப்பட்டு - கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த மனைவியை, அவரது கணவர் ஏமாற்றி அழைத்து சென்ற நிலையில், இளம்பெண் இறந்தார்.கணவர், மைத்துனன், மாமனார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மாமியாரை தேடி வருகின்றனர்.பள்ளிப்பட்டு, ஆஞ்சநேயா நகரை சேர்ந்தவர் பத்ரய்யா மகள், திவ்யா, 23. இவருக்கும், கர்லம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் சந்திரபோஸ், 25, என்பவருக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திவ்யா, தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை, அவருக்கு நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், அதற்காக, அவரது சான்றிதழ்களை கல்லுாரியில் இருந்து வாங்கி வரலாம் என கூறி, சந்திரபோஸ், புத்துாருக்கு அழைத்து சென்றார்.ஆனால், வழியிலேயே திவ்யாவை ஏமாற்றி, கர்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.இது குறித்து, திவ்யா, தன் தாயாருக்கு மொபைலில் தகவல் தெரிவித்துள்ளார்.சற்று நேரத்தில், திவ்யாவின் தந்தைக்கு போன் செய்த சந்திரபோஸ், உங்கள் மகளுக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறி, அழைப்பை துண்டித்துள்ளார்.உடன், திவ்யாவின் உறவினர்கள் கர்லம்பாக்கத்திற்கு புறப்பட்டு வந்தனர். சந்திரபோஸ் வீட்டு திண்ணையில், திவ்யா பிணமாக இருந்தார்.அவரது கணவர் வீட்டார் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். இது குறித்த புகாரின்படி, பள்ளிப்பட்டு போலீசார், சந்திரபோஸ் மற்றும் அவரது தந்தை பெருமாள், அவரது தம்பி வீரபிரதாப்சிங் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மாமியார் ராஜேஸ்வரியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X