கோவை:கோவையில் இந்திய தொழில் வர்த்தக சபை, கொடிசியா, சிஐஐ, சீமா, கோயிண்டியா, காட்மா, டேக்ட், கிடா, கோபியா, காஸ்மா, கொசிமா, டேப்மா உள்ளிட்ட சங்கங்களின் கூட்டம், கொடிசியாவில் நேற்று நடந்தது.மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மூலப்பொருட்கள் இயல்பாக கிடைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதில், மத்திய இரும்பு, உருக்கு துறை அமைச்சரை சந்தித்து பேசுதல், நீண்ட கால அடிப்படையில் செயில், விசாக், ஜிண்டால், டாடா, என்எஸ்ஐசி, எஸ்ஸார் போன்ற நிறுவனங்களிடமிருந்து மூலப்பொருட்களை நேரடியாக பெற, தொழில் அமைப்புகள் கொண்ட ஒரு கூட்டமைப்பை உருவாக்குதல், முன்னுரிமை அடிப்படையில் மூலப்பொருட்களை பெறுதல், என்எஸ்ஐசி நிதியுதவி பெற வங்கி உத்தரவாதம் அளித்தல் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகளுக்கு தேவையான ஸ்டீல், மூலப்பொருட்களை இந்தியாவில் எளிதில் கிடைக்கும் வகையில், மூலப்பொருட்களை இறக்குமதி வரியை குறைத்து வாங்க அனு மதிக்க வேண்டும்.இரும்பு உள்ளிட்ட உலோகங்களின் ஏற்றுமதிக்கு, உடனடியாக தடை விதித்து, உள்நாட்டில் தட்டுப்பாடின்றி கிடைக்க, விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மூலப்பொருள் விலை உயர்வதை தடுக்க, உடனடியாக தலையிடுமாறு, மத்திய, மாநில அரசுகளை கோருவது என, இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE