செங்கல்பட்டு - செங்கல்பட்டு மாவட்ட இணையதளத்தை, கலெக்டர் ஜான்லுாயிஸ் துவக்கி வைத்தார்.செங்கல்பட்டு மாவட்டத்திற்கான. இணையதள துவக்க விழா, கலெக்டர் அலுவலகத்தில், நேற்று, நடந்தது.கலெக்டர் ஜான்லுாயிஸ், இணையதளத்தை துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட தகவலியல் மைய அதிகாரி சகாதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், மாவட்டம் குறித்த அடிப்படை வரலாறுகள். பூகோள செய்திகள், கட்டமைப்பு விபரங்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட, பல்வேறு துறைகள் மற்றும் அதிகாரிகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.மேலும், பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள அவசரகால உதவி எண்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளலாம். பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.இணையதளம், https;//chengalpattu.nic.in, என்ற முகவரி மூலம், பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE