பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.ரவிகிரணின் இசை விழா

Added : டிச 18, 2020
Share
Advertisement
'நாத இன்பம்' என்ற அமைப்பு, இந்தாண்டில் நடைபெறும் இசை விழா கச்சேரிகளை, மெய்நிகர் ஒளிப்பதிவின் மூலம் ரசிகர்களுக்கு தந்து கொண்டிருக்கிறது. இந்த பதிவுகள் அனைத்தும், வழக்கமாக, அது கச்சேரி நிகழ்த்தும் இடத்திலேயே, பின்திரையில் கூட மாற்றமில்லாமல் செய்யப்பட்டிருப்பதால், ரசிகர்களின் அனுபவச் சூழல் பழக்கப்பட்ட ஒன்றாகப் போய்விட்டது. இந்த கச்சேரிகள் யாவும், காலஞ்சென்ற,

'நாத இன்பம்' என்ற அமைப்பு, இந்தாண்டில் நடைபெறும் இசை விழா கச்சேரிகளை, மெய்நிகர் ஒளிப்பதிவின் மூலம் ரசிகர்களுக்கு தந்து கொண்டிருக்கிறது.

இந்த பதிவுகள் அனைத்தும், வழக்கமாக, அது கச்சேரி நிகழ்த்தும் இடத்திலேயே, பின்திரையில் கூட மாற்றமில்லாமல் செய்யப்பட்டிருப்பதால், ரசிகர்களின் அனுபவச் சூழல் பழக்கப்பட்ட ஒன்றாகப் போய்விட்டது. இந்த கச்சேரிகள் யாவும், காலஞ்சென்ற, அதனது நிறுவனர் எஸ்.வி.கிருஷ்ணனுக்கான அர்ப்பணிப்பாகும். வலியுறுத்தல்இதில், கடந்த, 14ம் தேதி, ஜி.ரவிகிரணின் இசைக்கச்சேரி நடந்தது. இதில், எச்.என்.பாஸ்கர் வயலின், அருண் பிரகாஷ் மிருதங்கம் மற்றும் குருபிரசாத் கடம் வாசித்தார்.'ஆனந்தபைரவி' ராகத்தில் சொக்கிப் போககக் கூடியதும், தரத்தில் உயர்ந்ததுமான ஒரு ஆலாபனை, அதன் பின்னர் கமலாம்பா சம்ரக் ஷதுமாம் என்ற தீக்ஷிதரின் நவாவர்ண கீர்த்தனையை, அழகுற வழங்கினார். இந்த இன்பக் கடலில் இருக்கும்போதே, அதே ஸ்தானத்தை எட்டும் சங்கராபரண ஆலாபனை, இதற்கான பாடல் 'எந்துகு பெத்தல...'மற்ற பாடல்கள், பரலோக பயமு... - மந்தாரி - தியாகராஜர்; பார்வதி நின்னு... கல்கட - சியாமா சாஸ்திரி; வாசாம கோசர... கைகவசி - தியாகராஜர்; ஜபவமாடித... ஹிந்தோளம் - கனகதாசர் - கன்னட மொழி; நெஞ்சுக்கு நீதியும்... - பாரதியார்.இதில் கன்னட மொழிப் பாடல், 'சூழ்ச்சியும் பிறரை அழிக்கும் எண்ணங்களுடன் இருப்பவர்களுக்கு, ஜபத்தினாலும் தபத்தினாலும் என்ன பயன்?' எனும், கருத்தை வலியுறுத்தியது. ரவிகிரண், டி.எம்.கிருஷ்ணாவின் மாணவர்.புரிதல்குருவிடமிருந்து பாவத்துடன் அபரிமித நிதானத்தையும் பெற்றிருக்கிறார். முத்துசுவாமி தீக்ஷிதர் பால் ஈர்க்கப்பட்டு குருகுஹாம்ருத என்ற அறக்கட்டளை மூலம், எட்டயபுரத்தில் அவரின் அகண்டகான நிகழ்வை, கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.எச்.என்.பாஸ்கர் வயலினில், முக்கியமாக நெரவலின் போதும், கற்பனை ஸ்வரங்களை அளித்தபோதும், வாய்ப்பாட்டும் மிருதங்கமும் அளித்த போக்குகளை அப்படியே உள்வாங்கி, அவற்றிற்கு நேரிணையாக கடவாத்தியத்துடன் வழங்கியது, அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.லய வித்வான்கள் கல்கட ராகப் பாடலின் நடைபோக்கிற்குகந்தபடி வாசித்தனர். இருவருமே, தனியின் போது சம பங்கீட்டுடன் இயங்கி, இணையும் தருணத்தில், ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிதலுடன் வாசித்தனர்.- எஸ்.சிவகுமார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X