எண்ணுார் - கஞ்சா மற்றும் மது விருந்து வைத்த, பிரபல ரவுடி உட்பட, ஏழு பேர் கும்பலை, போலீசார் சுற்றி வளைத்து, கைது செய்தனர்.சென்னை, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு சுடுகாடு அருகே, நேற்று முன்தினம் இரவு, எண்ணுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏழு பேர் கும்பல், கஞ்சா மற்றும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.அவர்களை, அழைத்து விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதில்அளிக்கவே, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.இதில், பிடிபட்டவர்கள், அம்பத்துார், கள்ளிக் குப்பத்தைச் சேர்ந்த கணேஷ்குமார், 28, சூர்யா, 24, தனிஷ், 21, அஜேஷ், 21, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சஞ்சய், 20, விஜய், 20, மற்றும் ஆகாஷ், 22, என, தெரியவந்தது.கணேஷ்குமார் மீது, அம்பத்துார் உள்ளிட்ட காவல் நிலையங்களில், கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2018ல், கொலை வழக்கு ஒன்றில் கைதாகி, ஆந்திரா, சித்துார், வடமால் பேட்டை சிறையில் இருந்து, இரு தினங்களுக்கு முன் வெளிவந்தார்.நேற்று முன்தினம் இரவு, புழல் அருகே தன் நண்பர்களை சந்தித்த போது, சிறையில் இருந்து வெளிவந்ததை கொண்டாடும் விதமாக, கஞ்சா மற்றும் மது விருந்து வைக்க முடிவு செய்து, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு சுடுகாட்டில், கஞ்சா புகைத்தது தெரியவந்தது.தொடர்ந்து, கணேஷ்குமார் உள்ளிட்ட, ஏழு பேரையும் கைது செய்த போலீசார், விசாரணைக்கு பின், அவர்களை சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE