சென்னை - இடுப்பு மூட்டு எலும்பு அதீத வளர்ச்சியால் அவதிப்பட்டு வந்த வாலிபருக்கு, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், அதிநவீன சிகிச்சை வாயிலாக மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த, 24 வயது வாலிபருக்கு, இடுப்பு எலும்பு மூட்டு அதீத வளர்ச்சி அடைந்திருந்தது. இதன் காரணமாக, அவரது, இடுப்பு எலும்பு மற்றும் தொடை எலும்பு உரசும்போது, அதிக வலியுடன் அவதிப்பட்டு வந்தார். இடுப்பு எலும்புஇதன் காரணாக, உட்காரவும், இயல்பாக இருக்கவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை கிடைக்கவில்லை.ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின், மூட்டு நுண்துளை மற்றும் விளையாட்டு காயங்கள் துறையை அணுகினார்.அதன் நிபுணர் டாக்டர் லியோநார்ட் பொன்ராஜ் தலைமையிலான குழுவினர், வாலிபருக்கு, வழக்கமான அறுவை சிகிச்சையின்றி, சிறு துளையிட்டு, பாதிப்புக்குள்ளான இடுப்பு எலும்பு பகுதியை சரி செய்தனர். சிகிச்சை பெற்று நலமுடன் உள்ள வாலிபர் மற்றும் டாக்டர்களுக்கு மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் வாழ்த்துக்களை தெரிவித்தார்.இதுகுறித்து, டாக்டர் லியோநார்ட் பொன்ராஜ் கூறியதாவது:தென்மாநில அளவில், இதுபோன்ற சிகிச்சை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தான் அளிக்கப்படுகிறது. இந்த வாலிபர், அதீத இடுப்பு மூட்டு எலும்பு வளர்ச்சியால் அவதிப்பட்டு வந்தார். வழக்கமான அறுவை சிகிச்சையில், 20 செ.மீ., அளவிற்கு, குறிப்பிட்ட பாகம் திறக்கப்பட்டு, எலும்பு வளர்ச்சியின் பாகம் அகற்றப்படும். இதுபோன்ற சிகிச்சை யில் நோயாளி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நாட்களாகும். மேலும், மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய நிலையும் ஏற்படும். அதற்கு பதிலாக, 5 மி.மீ., அளவில், சிறு நுண்துளையிட்டு, அதீத வளர்ச்சியின் இருந்த எலும்புகள் சிராய்ப்பு வாயிலாக அகற்றப்பட்டது. மருத்துவ உபகரணம்இந்த சிகிச்சை, 45 நிமிடங்களில் செய்யப்பட்டது. அதன்பின், மறுநாள் நோயாளி, இயல்பாக அமர ஆரம்பித்தார். தற்போது, நலமுடன் உள்ளார். அவர், நன்றி தெரிவிக்கும் வகையில், மருத்துவமனைக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்கி தந்துள்ளார். இதுபோன்ற சிகிச்சை களை, இந்தியாவில் நான்கு டாக்டர்கள் மட்டுமே மேற்கொள்கின்றனர். அரசு டாக்டர்களில், நான் முதன்மையானேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE