சென்னை - வரதட்சணை கொடுமையில், மனைவி தற்கொலை செய்த வழக்கில், கணவருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை, ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் தேவராஜ். 38. இவருக்கும், வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கும், 2012ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஒரு மகன் உள்ளான். வரதட்சணை கேட்டு, ஜெயஸ்ரீயை, தேவராஜ் கொடுமை செய்துள்ளார்.இதன் காரணமாக, 2014ல் துாக்கிட்டு ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, பெரவள்ளூர் போலீசார், தேவராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சமி முன் நடந்தது. அரசு தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் எல்.ஸ்ரீலேகா வாதாடினார்.வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட தேவராஜூக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையும், 6,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE