சென்னை - தனியார் நிறுவனத்தை எதிர்த்து, 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.சென்னை, மணலியில்,எஸ்.ஆர்.எப்., என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரிந்த, 126 தொழிலாளர்களை, திடீரென அந்நிர்வாகம் வெளியேற்றியது.இதனால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்கள், ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது.இந்நிலையில், எஸ்.ஆர்.எப்., நிர்வாகத்தை கண்டித்து, நேற்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தசம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE