பொள்ளாச்சி:பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், திருப்பூர், பழநி, கோவை உட்பட வெளியூர் செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்ட் முகப்பு பகுதி அருகே உள்ள காலியிடத்தை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உள்ளது.மக்கள் கூறுகையில், 'பயணிகள், வாகனங்களை பஸ் ஸ்டாண்டில் நிறுத்திச் செல்கின்றனர். உறவினர்களை அனுப்ப வருபவர்களும், வாகனங்களை, 'ரேக்'களில் நிறுத்திச் செல்கின்றனர். முகப்பு பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பஸ் ஸ்டாண்ட்க்குள் வாகனங்கள் வரக்கூடாது என்ற விதிமுறை மீறப்படுகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE