ஆக்கிரமிப்பு அகற்றம்: குழாய் உடைப்பால் சிக்கல்

Added : டிச 18, 2020
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர், கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசு நிலத்தை மீட்டனர்.ஆனைமலை நெடுஞ்சாலை உட்கோட்டத்துக்கு உட்பட்ட, ஆனைமலை முக்கோணம், நெல்லுக்குத்திப்பாறை, இந்திரா நகர், அம்பராம்பாளையம் சுங்கம், வேட்டைக்காரன்புதுார், கோட்டூர், நா.மூ.சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில், அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.வணிக கடைகள், ஓட்டல்கள் என
 ஆக்கிரமிப்பு அகற்றம்: குழாய் உடைப்பால் சிக்கல்

ஆனைமலை:ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர், கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசு நிலத்தை மீட்டனர்.ஆனைமலை நெடுஞ்சாலை உட்கோட்டத்துக்கு உட்பட்ட, ஆனைமலை முக்கோணம், நெல்லுக்குத்திப்பாறை, இந்திரா நகர், அம்பராம்பாளையம் சுங்கம், வேட்டைக்காரன்புதுார், கோட்டூர், நா.மூ.சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில், அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.வணிக கடைகள், ஓட்டல்கள் என பலரும், ரோட்டை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்துள்ளதுடன், கட்டடங்களும் கட்டியுள்ளனர். இதனால், போக்குவரத்து பாதிக்கிறது.மக்கள் தொடர்ந்து புகார் கொடுத்ததையடுத்து, நேற்று முன்தினம் முதல் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.முதற்கட்டமாக, அம்பராம்பாளையம் சுங்கம் முதல் சேத்துமடை வரையில், உதவி கோட்டப்பொறியாளர் கவுசல்யா தலைமையில், போலீசார், பேரூராட்சி பணியாளர்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி, நிரந்தர ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. அப்போது, எதிர்பாராத விதமாக, நெல்லுக்குத்திப்பாறை பகுதியில், பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச்செல்லும் பிரதான குழாய் உடைந்தது. இதனால், மக்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது. நேற்று காலை, பேரூராட்சியினர் குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X