மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா பகுதியில், 11 ஊராட்சிகள், நான்கு பேரூராட்சிகள் உள்ளன. இதில், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தற்போது பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், சில திட்டங்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் நடக்கிறது. இது தவிர, திருமூர்த்திமலை கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.இருப்பினும், மக்களின் தேவைக்கு தகுந்த அளவில் குடிநீர் வினியோகம் செய்ய இயலவில்லை. கோடைகாலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மக்கள் தொகையும் பெருகி வரும் நிலையில், குடிநீர் தேவையை ஈடுகட்ட புதிய திட்டம் கட்டாயம் தேவை என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.இதனைத்தொடர்ந்து, திருமூர்த்திமலை கூட்டு குடிநீர் திட்டம் 2 உருவாக்கப்பட்டது. திருமூர்த்தி அணையிலிருந்து குழாய்கள் பதித்து, மடத்துக்குளம் பகுதிக்கு நீர் கொண்டு வரும் இந்த திட்டப் பணிகள், தற்போது தீவிரமடைந்துள்ளன. கே.டி.எல்., ஒன்றிய அலுவலகம் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE