பொது செய்தி

தமிழ்நாடு

அழகாகும் நகராட்சி விளையாட்டு மைதானம்: ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு

Added : டிச 18, 2020
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை நகராட்சி விளையாட்டு மைதானம், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.வால்பாறை நகரின் மையப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை, அரசு பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.பல ஆண்டுகளாக விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படாததால், விளையாட்டு
 அழகாகும் நகராட்சி விளையாட்டு மைதானம்: ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு

வால்பாறை:வால்பாறை நகராட்சி விளையாட்டு மைதானம், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.வால்பாறை நகரின் மையப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை, அரசு பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.பல ஆண்டுகளாக விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படாததால், விளையாட்டு வீரர்கள் விளையாட முடியாமல் தவித்தனர். இந்நிலையில், 'வால்பாறை புட்பால் அசோசியேஷன்' உட்பட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள், விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என, நகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை வைத்தனர்.அதன் அடிப்படையில், வால்பாறை நகாரட்சி சார்பில், விளையாட்டு மைதானம், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதால், பள்ளி மாணவர்கள், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'விளையாட்டு மைதானம் அழகு படுத்தும் பணி நடந்து வருகிறது. மைதானத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சிக்கான அனைத்து உபகரணங்களும் அமைக்கப்படும், மைதானத்தை சுற்றிலும் மின் விளக்கு, பார்வையாளர்கள் அமர இருக்கை வசதி ஏற்படுத்தப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X