கிணத்துக்கடவு:சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகரில், பூங்கா கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், அம்மா பூங்கா அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு அடுத்துள்ள சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், லட்சுமி நகர் வீட்டு மனையிடம் உள்ளது. நகர் ஊரமைப்புத்துறை இயக்குனரால் அங்கீகாரம் பெறபட்டுள்ளதால், பூங்காவுக்காக, 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த, 21 ஆண்டுகளாக பூங்கா அமைக்கவோ, உடற்பயிற்சி கூடம் அமைக்கவோ ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடந்த, 2019ம் ஆண்டில், கொண்டம்பட்டி ஊராட்சியில், 30 லட்சம் ரூபாய் செலவில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டுள்ளது.இதேபோல், இங்குள்ள, பூங்கா இடத்தில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE