பொது செய்தி

தமிழ்நாடு

'ஆழியாறு ஆற்றை காப்போம்' விவகாரம்! சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்

Added : டிச 18, 2020
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலையில், ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இப்பிரச்னை சட்டசபை தேர்தலில், அதிர்வலைகளை ஏற்படுத்தும் என, மக்கள் தெரிவிக்கின்றனர்.ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார் ஆகிய பேரூராட்சிகளில், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மூன்று பேரூராட்சிகளின் கழிவுநீர், ஆனைமலை

ஆனைமலை:ஆனைமலையில், ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இப்பிரச்னை சட்டசபை தேர்தலில், அதிர்வலைகளை ஏற்படுத்தும் என, மக்கள் தெரிவிக்கின்றனர்.ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார் ஆகிய பேரூராட்சிகளில், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மூன்று பேரூராட்சிகளின் கழிவுநீர், ஆனைமலை பேரூராட்சி அலுவலகத்தின் பின்பக்கம், அழுக்குசாமி கோவில் உட்பட, நான்கு பகுதிகளில் ஆழியாறு ஆற்றில் கலக்கிறது.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய இயந்திரம், குறைவான கொள்ளளவுடன் இருப்பதால், 10 ஆண்டுகளாக பயனற்றுக்கிடக்கிறது. இதனால், தினமும், 13 லட்சம் லிட்டருக்கும் அதிகமாக கழிவுநீர் ஆற்றில் கலந்து நீர் மாசடைந்து, ஆகாயத்தாமரைச் செடிகள் முளைத்துள்ளன. கழிவுநீர் கலந்த நீரே, ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகா பகுதிகள், கோவையின் சில பகுதிகளுக்கு வழங்கும் அவல நிலை நீடிக்கிறது.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதாக, 2016 தேர்தலில் வாக்குறுதி கொடுத்தனர். அதன்பின், இரண்டு முறை சொந்த செலவில், ஆகாயத்தாமரை செடிகளை அகற்றினர்.ஆட்சிக்காலமே முடியப்போகிறது, பிரச்னைக்கு இன்னமும் தீர்வு தான் இல்லை. இந்நிலையில், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய, மூன்று இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.இதற்காக, 3.20 கோடி ரூபாய் நிதி கேட்டு பேரூராட்சி சார்பில், 2018 ஆக., மாதம் அரசுக்கு கருத்துரு அனுப்பினர். ஆனால், இன்னமும் நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது, மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. தேர்தலுக்குள் நிதி ஒதுக்கி, இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாத சூழலில், வரும் சட்டசபை தேர்தலில் 'ஆழியாறு ஆற்றை காப்போம்', என்ற பிரச்னை பிரதானமாக எதிரொலிக்கும் என்கின்றனர் மக்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X