தற்காலிக வேகத்தடையால் விபத்து: நெடுஞ்சாலைத்துறை அலட்சியம் | Dinamalar

தற்காலிக வேகத்தடையால் விபத்து: நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்

Added : டிச 18, 2020
Share
உடுமலை:உடுமலை அருகே பாலம் கட்டுமான பணி நிறைவு பெற்றும், தற்காலிக வேகத்தடையை அகற்றாததால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.உடுமலை-திருமூர்த்திமலை ரோட்டில், சந்தனகருப்பனுார் அருகே, மழை நீர் ஓடையின் குறுக்கே, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாலம் கட்டுமான பணி சில மாதங்களாக நடந்தது. பணிகளுக்காக அருகிலேயே மாற்றுப்பாதையும், மண்ணால், பெரிய வேகத்தடையும்

உடுமலை:உடுமலை அருகே பாலம் கட்டுமான பணி நிறைவு பெற்றும், தற்காலிக வேகத்தடையை அகற்றாததால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.உடுமலை-திருமூர்த்திமலை ரோட்டில், சந்தனகருப்பனுார் அருகே, மழை நீர் ஓடையின் குறுக்கே, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாலம் கட்டுமான பணி சில மாதங்களாக நடந்தது. பணிகளுக்காக அருகிலேயே மாற்றுப்பாதையும், மண்ணால், பெரிய வேகத்தடையும் ஏற்படுத்தப்பட்டது.கட்டுமான பணிகளின் போதே, முறையாக எச்சரிக்கை பலகை, தடுப்புகள் ஏற்படுத்தாமல், விபத்துகள் ஏற்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் நிறைவு பெற்றும், வேகத்தடையை அகற்றவில்லை.அங்கு வேகத்தடை இருப்பது தெரியாமல், வளைவு பகுதியில், இருந்து வரும் வாகனங்கள், தடுமாறி, விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது. நேற்று இருசக்கர வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானர்கள்.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X