வால்பாறை:சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க வேண்டும் என, வால்பாறை சுற்றுலாமேம்பாட்டு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.வால்பாறை சுற்றுலாமேம்பாட்டு அமைப்பின் சார்பில், சுற்றுலாத் துறை அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாவட்டத்தின் ஒரே சுற்றுலா தலமான வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா சார்ந்த தொழில் மற்றும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட நிலையில், வால்பாறை மட்டும் திறக்கப்படவில்லை. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் காலங்களில், வால்பாறையில், சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, அக்காமலை கிராஸ் ஹில்ஸ் காட்சிமுனை, நீரார் அணை, தலநார் காட்சிமுனை, ரொட்டிக்கடை பாறைமேடு சிவன்கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வரும், சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE